Posts

"நாய்க்குட்டி"

'தோ தோ நாய்க்குட்டி துள்ளி வராத நாய்க்குட்டி யார் வந்து நின்னாலும் குரைக்கத் தெரியாத நாய்க்குட்டி புசுபுசுன்னு வளர்ந்த வாலை ஆட்;டத் தெரியாத நாய்க்குட்டி செல்லமாக மடியில் வைச்சு கொஞ்சினாலும் கத்தினாலும் கத்தத் தெரியாத நாய்க்குட்டி பேட்டரி போட்ட பின்னாடிதான் வந்து கத்தும் வாலை ஆட்டும் எங்கள் பொம்மை நாய்க்குட்டி'

சின்னப் பாப்பா

'சின்னச் சின்ன பாப்பா எங்க வீட்டு பாப்பா ஆன்ட்டிராய்டு ஃபோனை பூனை போல தேடும் தேடித் தேடி எடுத்து கேம் விளையாடும் சின்னச் சின்ன பாப்பா எங்க வீட்டுப் பாப்பா டிவி ரிமோட் எடுத்து டாக்கிங் டாமை போடும் டாம் பாடும் பாட்டை தானும் கூட பாடும் சின்னச் சின்ன பாப்பா எங்க வீட்டுப் பாப்பா பள்ளிக் கூடம் விட்டு வந்தா பர்கர் தேடி பார்க்கும் ஃப்ரிட்ஜ் முழுக்க சாக்லேட்டை எடுத்து எடுத்துப் பார்க்கும் சின்னச் சின்னப் பாப்பா எங்க வீட்டுப் பாப்பா பொறிகடலை பனைவெல்லம் போட்டுத் தின்னு பாப்பா அந்தக்கால பாப்பா எல்லாம் தின்னு நல்லா வளர்ந்தது நீயூம் தின்னு பாப்பா எங்கள் செல்லப் பாப்பா'

பாப்பா பாட்டு!

'பாப்பா பாப்பா பார் பாப்பா கேட்பா கேட்பா கதை கேட்பா வாப்பா வாப்பா வாப்பா நீ வாப்பா வண்டு நண்டு கதை கேப்பா வண்டு பறந்து பூ தேடும் நண்டு நகர்ந்து எதைத் தேடும் வண்டும் நண்டும் இருந்தாதான் இயற்கை உன்னைப் போல் சிரித்திடுமே ரெண்டு இருந்தா மழை பெய்யூம் நாளும் ஆளும் நனைந்திடவே பயிறும் வயலும் செழித்திடவே பாப்பா பாப்பா பார் பாப்பா"